அண்மை காலங்களாக இடம்பெற்றுவரும் எதியோப்பிய (Ethiopia) உள்நாட்டு யுத்தம் அண்டை நாடான எரித்திரியா (Eritrea) உள்ளும் நுழைந்துள்ளது. சனிக்கிழமை எதியோபியாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் சில எரித்திரிய தலைநகரில் உள்ள விமான நிலையத்தை தாக்கி உள்ளன.
Tigray People’s Liberation Front (TPLF) என்ற எதியோப்பியாவின் வடமேற்கு பகுதியான Tigray பகுதி ஆயுத குழுக்களுவுக்கும் எதியோப்பிய அரச படைகளுக்கும் இடையே அண்மை காலமாக யுத்தம் இடம்பெற்று வருகிறது.
எதியோப்பிய அரச படைகளின் உதவிக்கு எரித்திரியா வந்துள்ளதாக TPLF குற்றம் கூறுகிறது.
1991 ஆம் ஆண்டு முதல், 27 ஆண்டுகளாக Tigray பகுதியினரின் கைகளில் இருந்த எதியோப்பிய ஆட்சி 2018 ஆம் ஆண்டு Oromia பகுதியினரான பிரதமர் Abiy Ahmed கைக்கு மாறியது. அதில் இருந்து Tigray பகுதியினரின் அரசியல் மற்றும் இராணுவ தாக்குதல்கள் ஆரம்பமாகின.
Abiy எதியோபியாவுக்கும் எரித்திரியாவுக்கும் இடையிலான நீண்டகால யுத்தத்தை நிறுத்தி, சமாதானம் அடைந்ததால் அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு (Nobel Peace Prize) கிடைத்திருந்தது.