எம். ஜி. ஆர். சொத்துக்கள் நீதிமன்றம் கையில்

MGR

சுமார் 29 வருடங்களின் முன் காலம் சென்ற நடிகர், முன்னாள் தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆர். சொத்துக்களின் பொறுப்பை நீதிமன்றம் இன்று வியாழன் எடுத்துள்ளது. இந்த சொத்துக்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை நிர்வாகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களை நியமித்து உள்ளது.
.
1987 இல் மறைந்த எம். ஜி. ஆர். தனது சொத்துக்களுக்கு பொறுப்பாக ராகவாச்சாரி என்பவரை சட்டப்படி நியமித்து இருந்தார். அத்துடன், ராகவாசரியின் மறைவின் பின் ராஜேந்திரன் என்பவரை பொறுப்பாளராக இருக்கும்படியும் கூறியிருந்தார். ஆனால் ராஜேந்திரனும் 2013 ஆம் ஆண்டில் மரணித்துவிட்டார்.
.
இந்நிலையில், எம். ஜி. ஆரின் தத்து பிள்ளைகள் தம்மைத்தான் சொத்துக்களின் பாதுகாவலர் ஆக நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்றனர்.
.
எம். ஜி. ஆர். தனது சொத்துக்களின் ஒரு சிறு பகுதியை மட்டும் மனைவி ஜானகிக்கு எழுதி இருந்தார். ஏனைய சொத்துக்களை அவர் ‘எம். ஜி. ஆர். ஊமைகள் இல்லம்’ என்ற ஒரு ஊமைகள் இல்லம் அமைத்து சேவை செய்ய வேண்டியிருந்தார். அந்த இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவு, உடை, கல்வி, மருத்துவம் எல்லாம் வழங்கவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் சில சொத்துக்களை அ.தி.மு.கவுக்கும் எழுதி இருந்தார். ஆனால் அந்த கட்சி உடையின், அந்த சொத்துக்களையும் ஊமைகள் இல்லத்துக்கு வழங்க வேண்டியிருந்தார்.
.
எம். ஜி. ஆருக்கு சொந்த பிள்ளைகள் இல்லை என்றாலும், அவர் தனது மனைவி ஜானகியின் சகோதரரின் 7 பிள்ளைகளையும் தத்து எடுத்திருந்தார். அந்த தத்து பிள்ளைகள் எம். ஜி. ஆரின் சொத்துக்களில் மோகம் கொண்டு சண்டைகளில் இறங்கினர்.
.
அவ்வாறு தத்து எடுக்கப்பட்ட சுதா என்ற பெண்ணின் கணவரான விஜயன் என்பவரை தத்து எடுக்கப்பட்டு இருந்த இன்னோர் பெண்ணான பானு என்பவர் கைக்கூலிகள் வைத்து 2008 ஆம் ஆண்டில் அடித்து கொலை செய்திருந்தார். இக்கொலை காரணமாக பானுவும், வேறு ஆறுபேரும் தற்போது வாழும்கால சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
.

இந்நிலையில் நீதிபதி சுரேஷ், எம். ஜி. ஆரின் சொத்துக்களை நீதிமன்றின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளார்.
.