இஸ்ரேல் பிரதமர் நெற்றன்யாஹு (Netanyahu) பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க காங்கிரசில் இன்று புதன் உரையாற்றவுள்ளார். International Criminal Court (ICC) இவரை காசா யுத்த war crime குற்ற விசாரணைக்கு கைது செய்ய விண்ணப்பித்த வேளையிலேயே இவர் காங்கிரசில் உரையாற்றவுள்ளார்.
காங்கிரசுக்கு உள்ளே இவரின் உரையை சுமார் 80 Democratic கட்சி House உறுப்பினர்களும், 6 Democratic கட்சி செனட்டர்களும் நெற்றன்யாஹுவின் உரையை பகிஷ்கரிக்கவுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை 200 அமெரிக்க யூதர்கள் நெற்றன்யாஹு எதிர்ப்பை Capitol கட்டிடத்தின் உள்ளே செய்திருந்தனர்.
அதேவேளை வீதிகளில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன. குழப்பங்களை தடுக்க பெருமளவு போலீசார் அழைக்கப்பட்டுள்ளனர். சில வீதிகளும் மூடப்பட்டுள்ளன.
காங்கிரஸ் உரையின் பின் நெற்றன்யாஹு சனாதிபதி பைடெனையும், முன்னாள் சனாதிபதி ரம்பையும் சந்தித்து உரையாற்றுவார்.