எதியோப்பிய இராணுவ புரட்சியாளர் பலி

Ethiopia

எதியோபியாவில் உள்ள Amhara பகுதியில் இராணுவ புரட்சி மூலம் ஆட்சிக்கு வரமுனைந்த பிரிகேடியர்-ஜெனரல் Asaminew Tsige சனிக்கிழமை கொலை செய்யப்படுள்ளதாக அரச படைகள் கூறுகின்றன. Asaminew Tsige அவரது கட்டுப்பாடில் உள்ள Amhara பகுதியில் தனது ஆட்சியை நிறுவ முயன்றுள்ளார்.
.
Asaminew Tsige யின் இராணுவ புரட்சியை தடுக்க முனைந்த எதியோப்பிய படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் Seare Mekonnen என்பவரும் Tsige கையாட்களால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
.
பிரதமரின் ஆதரவு கொண்ட, Amhara பகுதி ஆளுநர் Ambachew என்பவரும் Tsige தரப்பால் சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
.
நிலைமையை கட்டுப்படுத்த எதியோப்பிய படைகள் Amhara பகுதிக்கு விரைந்துள்ளன.
.
தற்போதைய பிரதமர் Abiy Ahmed அரச அதிகாரிகள் செய்யும் ஊழல்களை கடுமையாக கண்டிப்பதால் பலம் கொண்ட அதிகாரிகள் பிரதமருக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து உள்ளனர் என்று கூறப்படுகிறது.
.
ஆபிரிக்கா கண்டத்தின் இரண்டாவதாக அதிக மக்களை கொண்ட எதியோப்பியாவின் பொருளாதாரம் நன்கு வளர்ந்து வருகிறது.
.