நீண்ட காலமாக மத்திய கிழக்கு நாடுகளை தமது சர்வாதிகார கைப்பொம்மைகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன மேற்கு நாடுகள். அதற்கு ஆபத்து வந்தது ருநீசியாவில் (Tunisia) ஆரம்பித்த Arab Spring என்றழைக்கப்படும் அரசியல் சீர்திருத்ததுக்கான புரட்சி. தாம் இழந்த ஆளுமையை மீண்டும் நிறுவ செயல்பட்டன மேற்குலகும், இஸ்ரவேலும்.
முதலில் எகிப்தில் கைப்பொம்மை சர்வாதிகாரி ஒருவர் அமர்த்தப்பட்டார். இவரின் முதல் வேலை இஸ்ரவேலின் பாதுகாப்பதே.
.
லிபியாவில் இருந்த மேற்கின் கைப்பொம்மையாக இருக்க மறுத்த கடாபியும் இஸ்லாமிய புரட்சியாளர் உதவியுடன் கொலப்பட்டார். ஆனால் இப்போ அந்த இஸ்லாமிய புரட்சியாளரையும் அளித்து, ஒரு கைபபொம்மையை ஆட்சியில் அமர்த்த முனைகிறது மேற்கும் அதன் நட்பு சர்வாதிகாரங்களும்.
.
இதன் ஒரு படியாக எகிப்தும், UAEயும் இணைந்து வியாழன் அன்று லிபியாவில் உள்ள இஸ்லாமிய குழுக்கள் மீது விமான தாக்குதல் நடாத்தி உள்ளன.
.
இவர்களின் நோக்கம் இஸ்லாமிய குழுக்களை அளித்து, லிபியாவின் முன்னாள் இராணுவ ஜெனரல் Khalifa என்பவரை ஆட்சியில் அமர்த்துவதே.
.
ஜெனரல் Khalifa, கடாபியால் துரத்தப்பட்ட போது அமெரிக்கா சென்று, அமெரிக்க பிரசையாகி Virginiaவில் கடாபி அழிப்பு வரை வாழ்ந்தவர். இவர் இப்போ மீண்டும் லிபியா சென்று அரசியலில் இறங்கியுள்ளார். இவரை ஒரு CIA பொம்மை என்றே பலரும் கருதுகிறார்கள்.