எகிப்தின் ஜனாதிபதி வேட்பாளர் கைது

EgyptElection

Sami Annan என்ற எகிப்தின் முன்னாள் ஜெனரல் தான் வரும் ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி சிசிக்கு (Sissi)  எதிராக, போட்டியிட உள்ளதாக கடந்த வெள்ளி அறிவித்து இருந்தார். ஆனால் அவர் இன்று செவ்வாய் சிசி தரப்பால் கைது செய்யப்பட்டு உள்ளார். சிசி தலைமையிலான எகிப்தின் இராணுவம் தற்போது இந்த முன்னாள் ஜெனரலை விசாரணை செய்கிறது.
.
ஜெனரல் சிசி 2013 ஆம் ஆண்டு இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்திருந்தார். முபாரக்குக்கு ஆராதவு வழங்கிய மேற்கு நாடுகளும், இஸ்ரவேலும் சிசிக்கு அதேவகை ஆதரவை வழங்கி வருகின்றன.
.
சில நாட்களின் முன் முன்னாள் Ahmed Shafiq என்ற முன்னாள் பிரதமரும் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டு இருந்தார்.
.
இந்நிலை தொடரின் இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்த சிசி மட்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிலை தோன்றும்.
.
சதாம் தனது ஆட்சி காலத்திலும் இவ்வாறு ஏனைய போட்டியாளர்களை கைது செய்து அடைத்துவிட்டு, தான் மட்டும் தனித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பெரு வெற்றியை அடைந்தபோது கிளர்ந்த மேற்கு நாடுகள், சிசி விடயத்தில் தம் நலன் கருதி பாராமுகமாக உள்ளன.
.