ஊழல் நிரம்பிய FIFA

FIFA

உலகின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பான FIFAவின் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் பலர் ஊழல்/இலஞ்சம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். FIFAவின் முன்னாள் உபதலைவரான Jack Warner இன்று Trinidad and Tobago என்ற நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
.
Warner கைது செய்யப்பட முன் வேறு 6 முன்னாள் FIFA அதிகாரிகள் சூரிச் (Zurich) ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் தற்போதைய உபதலைவர்கள் Jeffry Webb, Eugenio Figueredo ஆகியோரும் அடங்குவர்.
.
கடந்த 20 ஆண்டு காலப்பகுதியில் சில FIFA அதிகாரிகள் சுமார் U$ 150 மில்லியன் இலஞ்சமாக பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் FIFAவை தென் ஆபிரிக்காவில் நடத்துவதற்கு ஆதரவு பெற 3 அதிகாரிகளுக்கு $10 மில்லியன் இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
.
2018 ஆம் ஆண்டு FIFA போட்டிகள் ரஷ்யாவிலும் 2022 போட்டிகள் கட்டாரிலும் (Qatar) இடம்பெறவுள்ளன. இந்த நாடுகளை தெரிவு செய்வதிலும் இலஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டாலும், இந்த நாடுகளில் போட்டிகள் நடைபெறுவது நிறுத்தப்பட மாட்டாது என FIFA தெரிவித்துள்ளது.
.

இங்கே குறிப்பிடவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், கால்பந்தாட்ட விளையாட்டு அரங்கில் பொதுவாக கடைசி வாங்கிலில் இருக்கும் அமெரிக்கா முன்னின்று இந்த கைதுகளை நடாத்துகிறது. கால்பந்தாட்ட விளையாட்டில் முன்னணி வகிக்கும் நாடுகள் பொதுவாக மௌனமாக உள்ளன.