China Huarong Asset Management Company என்ற சீன முதலீட்டு நிறுவனத்தின் chairman ஆக பதவி வகித்த Lai Xiaomin என்ற அதிகாரிக்கு நேற்று வெள்ளிக்கிழமை சீனா மரண தண்டனை வழங்கி உள்ளது. ஊழல் காரணமாக சீனாவில் மரண தண்டனை பெறும் அதி உயர் அதிகாரி இவரே.
இவர் 2008ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையான தனது பதவி காலத்தில் சுமார் $278 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இவருக்கான மரணதண்டனை தீர்ப்பு கடந்த 5ம் திகதி Tianjin நகர நீதிமன்றால் வழங்கப்பட்டு இருந்தது.
மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு முன் இறுதி தடவையாக உறவினர் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டு இருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
தற்போதை சனாதிபதி சீ (Xi) காலத்தில் சீன அதிகாரிகளின் ஊழல் கடும் தண்டனைகளை பெற்று வருகின்றன. ஊழல் செய்யும் நூற்றுக்கணக்கிலான இடைநிலை அதிகாரிகளும் அங்கு பலத்த தண்டனைகள் பெற்று வருகின்றனர்.
ஊழல் காரணமாக Zhao Liping என்ற உயர் அதிகாரி ஒருவரும் படுகொலை ஒன்றுக்கு காரணமாக இருந்தார் என்ற காரணத்தால் 2016ம் ஆண்டு மரண தண்டனை பெற்று இருந்தார்.
கடந்த 8ம் திகதி Hu Huaibang என்ற China Development Bank நிறுவனத்தின் முன்னாள் chairman ஆக பதவியில் இருந்தவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது.