ஊக்க மாத்திரையால் ரஷ்யா மீது ஒலிம்பிக் தடை

WADA

ரஷ்ய விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் ஊக்க மாத்திரை பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்த WADA (World Anti-Doping Agency) ரஷ்யா மீது 4-வருட தடை விதித்து உள்ளது. போட்டிகளில் மேலதிக உந்து சக்தியை பெறும் நோக்கில் சில விளையாட்டு வீரர்கள் ஊக்க மாத்திரைகளை பயன்படுவர். ஆனால் அது சட்டத்துக்கு விரோதம்.
.
மேற்படி தடை காரணமாக ரஷ்யா 2020 Tokyo ஒலிம்பிக், 2022 Qatar World Cup போன்ற போட்டிகளில் பங்கு கொள்ளுமா என்பது சந்தேகமே.
.
முன்னரும் சில தடவைகள் ரஷ்ய வீரர்கள் ஊக்க மாத்திரரை பயந்துபடுத்துவது காரணமாக தடை செய்யப்பட்டு இருந்தனர்.
.
குற்றம் காணப்படாத ரஷ்ய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்தும் ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கு கொள்ளலாம் என்றாலும், அவர்கள் ரஷ்ய கொடியின் கீழ் பங்குகொள்ள முடியாது. பதிலாக ஒலிம்பிக் கொடி போன்ற பொது கொடியின் கீழேயே அவர்கள் பங்கு கொள்ள முடியும்.
.
Court of Arbitration for Sport (CAS) ஊடான சட்ட நடவடிக்கைகள் மூலம் இந்த தடை தவறு என்று நிரூபிக்க ரஷ்யாவுக்கு 3 கிழமைகள் வழங்கப்படுள்ளது.
.