உல்லாச பயணிகள் மரணங்களுக்கு Bedbug மருந்து காரணம்?

உல்லாச பயணிகள் மரணங்களுக்கு Bedbug மருந்து காரணம்?

அண்மையில் இலங்கை வந்திருந்த 24 வயதுடைய Ebony McIntosh என்ற பிரித்தானியரும், 26 வயதுடைய Nadine Raguse என்ற ஜெர்மன் நாட்டவரும் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் மரணமாகி இருந்தனர். இவர்களின் மரணங்களுக்கு இவர்கள் தங்கியிருந்த விடுதியில் வீசப்பட்ட bedbug கிருமிநாசினி காரணமாக இருக்கலாம் என்று தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

இவர்கள் தங்கியிருந்த Miracle Colombo City என்ற hostel இல் bedbug தொல்லையை ஒழிக்க கிருமிநாசினி வீசப்பட்டதால் அந்த நஞ்சு மரணங்களுக்கு காரணமானதா என்பதை அறிய பிரித்தானிய அதிகாரிகள் அறிய முனைகின்றனர்.

Ebony பெப்ரவரி 1ம் திகதி மரணமாகி இருந்தார். அதே தினம் இவருடன் வேறு சிலரும் இந்த hostel லில் இருந்து வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு இருந்தனர். வைத்தியசாலையில் Ebony சுவாசிப்பதற்கு சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Ebony யின் உறவினர் இலங்கை வருகின்றனர். மேற்படி hostel தற்போது மூடப்பட்டுள்ளது.