ஆகஸ்ட் மாதம் சீனா ஏவிய, அணு குண்டை காவக்கூடிய, Hypersonic ஏவுகணை ஒன்று உலகை சுற்றி வந்துள்ளது. இதை பின்னர் அறிந்த அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனா இவ்வாறு கணையை ஏவியதை மட்டுமன்றி, இவ்வகை கணை ஒன்றை தயாரித்து உள்ளதையும் அமெரிக்க உளவு அறிந்து இருக்கவில்லை.
மேற்படி கணையை ஏவிய காலத்தில் சீனா பெருமளவு தென்சீன கடலை போக்குவரத்துக்கு தடை செய்து இருந்தாலும், ஏவுகணை ஏவப்பட்டதை எவரும் அறிந்து இருக்கவில்லை. அந்த ஏவுகணை சீன தரையில் இருந்தும் ஏவப்பட்டு இருக்கலாம்.
நேற்று சனிக்கிழமையே அமெரிக்கா இந்த உண்மையை கசிய விட்டுள்ளது. ஆனால் சீனாவோ அல்லது அமெரிக்காவோ உத்தியோகபூர்வமாக எதையும் கூறவில்லை.
மேற்படி பரிசோதிப்பு ஏவுகணை குறியை தாக்க தவறி, அதிலிருந்து இருந்து சுமார் 30 km தொலைவில் தாக்கி இருந்தாலும், சீனா கொண்டுள்ள மேற்படி தொழில்நுட்பம் அமெரிக்கா கொண்டுள்ள அறிவுக்கும் மேலாக வளர்ந்து உள்ளமையை காட்டுகிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் Intercontinental Ballistic Missiles (ICBM) வளிமண்டலத்துக்கு மேலே, மிக உயரமான பரவளைவு பாதையில் செல்வதால் எதிரி விரைவில் அதன் வருகையை அறிந்து எதிர்ப்பு ஏவுகணையால் தாக்கி அழிக்கலாம். ஆனால் Hypersonic glide vehicle வளிமண்டலத்துள் தாழ்வாக சென்று தாக்குவதால் எதிரி அதை அறிந்து தாக்கி அழிப்பது கடினம்.
இவ்வகை hypersonic ஏவுகணை சுமார் 6,200 km/h வேகத்தில் பயணிக்கும், அதாவது ஒளியிலும் சுமார் 5 மடங்கு அதிக வேகம்.