உலகின் 47.5% சொத்துக்கள் 1.5% மக்கள் கையில் உள்ளதாக 2024ம் ஆண்டுக்கான UBS வங்கியின் Global Wealth Report என்ற ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த 47.5% சொத்தின் பெறுமதி சுமார் $213 டிரில்லியன் ($213,000 பில்லியன் ஆகும். இந்த சொத்துக்களில் பெருமளவானவை பங்குச்சந்தை சொத்துக்கள் ஆனபடியால் இவற்றின் பெறுமதி திட்டமானது அல்ல.
உலகில் சுமார் 58 மில்லியன் அமெரிக்க டாலர் millionaires உள்ளதாக மேற்படி அறிக்கை கூறுகிறது. அதில் 21.95 மில்லியன் millionaires அமெரிக்காவிலும், 6.01 மில்லியன் millionaires சீனாவிலும், 3.06 மில்லியன் millionaires பிரித்தானியாவிலும், 2.87 மில்லியன் millionaires பிரான்சிலும், 2.83 மில்லியன் millionaires ஜப்பானிலும் உள்ளனர்.
2000ம் ஆண்டு அமெரிக்காவில் 7.6 millionaires இருந்திருந்தனர். 2023ம் அங்கு millionaires தொகை 22 மில்லியன் ஆக அதிகரித்தது.
2000ம் ஆண்டு சீனாவில் 39,000 millionaires மட்டுமே இருந்தனர். ஆனால் 2023ம் ஆண்டில் அங்கு உள்ள millionaires தொகை 6,013,282 (6 மில்லியன்) ஆக அதிகரித்துள்ளது.
2000ம் ஆண்டு இந்தியாவில் 37,000 millionaires இருந்தனர். 2023ம் ஆண்டு அங்கு 868,671 millionaires இருந்துள்ளனர்.
2000ம் ஆண்டு கட்டாரில் 46 millionaires மட்டுமே இருந்தனர். ஆனால் 2023ம் ஆண்டில் இத்தொகை 26,163 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை உலகின் 39.5% மக்களிடம் $10,000 க்கும் குறைந்த அளவு பெறுமதியான சொத்துக்களே உள்ளன.
2028ம் ஆண்டு அளவில் பிரித்தானியா பெருமளவு millionaires களை இழக்கும் என்றும் கணிக்கப்படுள்ளது.