இன்று உலக அளவில் இடம்பெற்ற தொழில்நுட்ப (IT) இடர் காரணமாக பெருமளவில் விமான சேவைகள், வங்கிகள், செய்தி சேவைகள் ஆகியன முடங்கி உள்ளன.
அமெரிக்காவில் Delta, United, American ஆகிய விமான சேவைகள் தொலைத்தொடர்பு இடர்பாடுகள் காரணமாக விமானங்களை வெள்ளி காலை தரையில் முடக்கி உள்ளதாக கூறியுள்ளன. Frontier, Allegiant, SunCountry ஆகிய விமான சேவைகளும் முடங்கி உள்ளன.
Microsoft நிறுவனத்தின் Azure cloud சேவை மீது நேற்று வியாழன் மாலை செய்யப்பட்ட தாக்குதலேயே மேற்படி சேவைகள் முடங்கின என்று கருதப்படுகிறது. ஆனால் Crowdstrike என்ற நிறுவனத்தின் antivirus நிறுவனத்தின் update காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
Sky News செய்தி சேவையும், பிரித்தானிய ரயில் சேவையும் கூடவே பாதிப்படைந்து உள்ளன.