ஒருவரை ‘வியர்வை சிந்த உழைத்தவர்’ என்று அழைப்பது சாதாரணம். ஒருபடி மேலே சென்று சிலரை ‘உதிரம் சிந்த உழைத்தவர்’ என்றும் அழைப்பது உண்டு. அப்படி உத்திரம் சிந்துவது சாத்தியமா? அது சாத்தியம் என்கிறது Canadian Medical Association Journal (CMAJ) பதிப்பு செய்த ஆய்வு கட்டுரை ஒன்று.
.
இன்று அக்டோபர் 23 ஆம் திகதி CMAJ வெளியிட்ட கட்டுரை ஒன்றிப்படி, இத்தாலி நாட்டில் 21 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 3 வருடங்களாக இவ்வாறு இரத்தம் அவ்வப்போது வியர்வையாக வெளியேறும் குறைபாட்டை கொண்டுள்ளாராம். முதலில் பலரும் இந்த விடயத்தை ஒரு ஏமாற்று வேலை என்றே கருதி இருந்தாலும் பின்னர் விடயம் உண்மையானது என்று தெரிந்தது.
.
உடலில் வெட்டு காயங்கள் எதுவும் இல்லாத நிலையிலேயே இவ்வாறு உதிரம் வியர்வை போல் வெளியேறுகிறதாம். இந்த குறைபாட்டுக்கான காரணத்தை வைத்திய துறை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. பதிலாக பல கருத்துக்களே முன்வைக்கப்பட்டு உள்ளன.
.
இவ்வகை குறைபாடு 16 ஆம் நூற்றாண்டில் இருந்தே அடையாளம் காணப்பட்டு உள்ளது எனப்படுகிறது. 1600 ஆம் ஆண்டுகளில் 12 வயதுடைய ஒரு சுவிஸ் நாட்டு பையன் ஒருவனும் இவ்வகை குறைபாடு ஒன்றை கொண்டிருந்தானாம். 2000 ஆம் ஆண்டுமுதல் சுமார் 18 பேர் இவ்வகை குறைபாடு காரணமாக வைத்தியத்தை நாடியுள்ளார்.
.
சிலுவையில் (crucifixion) அறையமுன் ஜேசுபிரான் இவ்வாறு உதிரத்தை சித்தியதாக கூறுகிறது பைபிள்.
.
http://www.cmaj.ca/content/189/42/E1314
படம்: CMAJ
.