உண்மைக்கு மாறாக செலன்ஸ்கி மீது காழ்பு கொட்டும் ரம்ப் 

உண்மைக்கு மாறாக செலன்ஸ்கி மீது காழ்பு கொட்டும் ரம்ப் 

எம்போதும் ஆதாரம் அற்ற கூற்றுகளை பரப்பும் அமெரிக்க சனாதிபதி ரம்ப் தற்போது யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி (Zelensky) மீது பொய் குற்றங்களை சுமத்தி வசைபாட ஆரம்பித்துள்ளார்.

செலன்ஸ்கி மீதான ரம்ப் மிகப்பெரிய பொய் குற்றச்சாட்டு ரஷ்ய-யூக்கிறேன் யுத்தத்தை செலன்ஸ்கியே ஆரம்பித்தார் என்பது. அது பொய். செலன்ஸ்கிக்கு முன் யூக்கிறேனை ஆண்ட ரஷ்ய ஆதரவு தலைவர் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் விரட்டப்பட மேற்கின் ஆதரவுடன் பதவிக்கு வந்தவரே செலன்ஸ்கி.

செலன்ஸ்கியின் பிரதான நோக்கம் யூக்கிறேனை NATO அணியில் இணைப்பதே. அதையே முன்னைய அமெரிக்க அரசும், NATO நாடுகளும் அப்போது விரும்பின. இதை தடுக்கவே பூட்டின் யூக்கிறேன் உள்ளே தனது இராணுவத்தை அனுப்பினார்.

செலன்ஸ்கி யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை, பூட்டினே யுத்தத்தை ஆரம்பித்தார்.

யுத்தம் ஆரம்பமாகியதால் அதன்பின் யூகிறேனில் தேர்தல் நடைபெறவில்லை. அதனால் செலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி (“dictator without election”) என்கிறார் ரம்ப். இரண்டாம் உலக போர் காலத்தில் பிரித்தானியாவில் தேர்தல் நடைபெறவில்லை. இது சாதாரணம்.

செலன்ஸிகிக்கு யூகிறேனில் தற்போது 4% ஆதரவே உண்டு என்கிறார் ரம்ப். அதற்கும் ரம்ப்  எந்தவித ஆதாரமும் வழங்கவில்லை. ஆனால் செலன்ஸ்கிக்கு சுமார் 57% ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. அது ரம்புக்கு அமெரிக்காவில் உள்ள ஆதரவிலும் அதிகம்.

யூக்கிறேனில் பல மில்லியன் பேர் (“million of people killed”) மரணித்ததாகவும் ரம்ப் ஆதாரம் இன்றி கூறியுள்ளார். 

பைடென் ஆட்சிக்காலத்தில் முன்னாள் சனாதிபதி பைடெனின் மகன் Hunter மீது வழக்கு ஒன்றை தொடர ரம்ப் செலன்ஸ்கியை கேட்டிருந்தார். அப்போது பைடென் சனாதிபதி ஆக இருந்ததால் ரம்ப் கேட்டபடி செலன்ஸ்கி Hunter மீது விசாரணை செய்யவில்லை. அது செலன்ஸ்கி மீதான ரம்பின் காழ்ப்புக்கு காரணம் ஆகியது.