இன்று திங்கள் ஐ. நா. பாதுகாப்பு சபை செய்து கொண்ட வாக்கெடுப்பில் உடன் காசா யுத்த நிறுத்தத்துக்கான தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கா வாக்களியாது இருக்க (abstained) ரஷ்யா, சீனா உட்பட ஏனைய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
அமெரிக்கா இம்முறை தனது வீட்டோ வாக்கை பயன்படுத்தி தீர்மானத்தை தடை செய்யவில்லை. இது அமெரிக்காவின் போக்கில் ஏற்பட்டுள்ள சிறிய மாற்றத்தை காட்டுகிறது.
இஸ்ரேல், ஹமாஸ் இரண்டும் இந்த தீர்மானத்துக்கு இணங்க செயற்படுமா என்பது அறியப்படவில்லை.