உங்கள் smartphone களில் உள்ள WhatsApp செயல்பாட்டை பயன்படுத்தி உங்களை உளவு பார்க்கும் வல்லமையை இஸ்ரேலின் NSO என்ற நிறுவனம் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. WhatsApp செயல்பாட்டில் உள்ள குறைபாடு (software flaw) ஒன்றை பயன்படுத்தியே இந்த உளவு பார்த்தல் செயல்படுத்தப்படுகிறது.
.
WhatsApp உரிமையாளரான Facebook நிறுவனம் Financial Times என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட இந்த செய்தி உண்மை என்று நேற்று திங்கள் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த குறைபாட்டை அடைக்கவும் Facebook முனைகின்றது.
.
WhatsApp செயல்பாட்டில் உள்ள குறைபாட்டை பயன்படுத்தி, உங்களுக்கு ஒரு ‘missed call’ அனுப்புவதன் மூலமே இந்த உளவு வேலைகள் ஆரம்பிக்கின்றன. Missed call ஒன்றை அனுப்பும்போதே இந்த உளவு software உம் அனுப்பப்படுகிறது. Smartphone உரிமையாளருக்கு தம்மை உளவு பார்ப்பது தெரிந்திருக்காது.
.
பத்திரிகையாளர்கள், மனித உரிமைகள் நிறுவன ஊழியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரே அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். Amnesty International அதிகாரிகளும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
.
துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துள் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஜமால் காஸோக்கியும் (Jamal Khashoggi) இந்த தாக்குதலுக்கு உட்பட்டதாக கூறப்படுகிறது.
.
உலகில் சுமார் 1.5 பில்லியன் மக்கள் WhatsApp சேவையை பயன்படுத்துகின்றனர்.
.