உக்கிரம் அடையும் Los Angeles காட்டுத்தீ, சிலர் பலி

உக்கிரம் அடையும் Los Angeles காட்டுத்தீ, சிலர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் பரவும் காட்டு தீக்கு குறைந்தது 5 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் 150,000 பேர் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

புதன் வரை Palisades பகுதி தீ மட்டும் சுமார் 15,800 ஏக்கர் பரப்பை எரித்துள்ளது. இங்கு சுமார் 1,000 வீடுகள், கட்டிடங்கள் எரிந்து அழிந்துள்ளன. இங்கே 3 பாடசாலைகளும் தீக்கு இரையாகி உள்ளன.

Eaton பகுதி தீக்கு சுமார் 10,000 ஏக்கர் பரப்பு எரிந்துள்ளது. இங்கு சுமார் 13,000 வீடுகள், கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.

இங்கு வீசும் பலத்த காற்று தீ வேகமாக பரவ காரணமாகிறது. சில இடங்களில் 110 km/h வேகத்தில் காற்று வீசுகிறது.

இப்பகுதி வீதிகளில் போதிய நீர் இன்மை தீயணைப்பை பணிகளுக்கு மேலும் பாதகமாக உள்ளது.

காட்டுத்தீ காரணமாக குறைந்தது 1.5 மில்லியன் வீடுகள், வர்த்தகங்கள் மின்சாரம் இன்றி உள்ளன.