ஏப்ரல் மாதம் 1ம் திகதி இஸ்ரேல் சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல் செய்து 13 பேரை கொலை செய்ததை தண்டிக்க சனிக்கிழமை இரவு ஈரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 300 கணைகளை (drones, cruise missiles, ballistic missiles) ஏவியுள்ளது.
அவற்றில் 99% கணைகளை அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, இஸ்ரேல் கூட்டாக தமது தடுப்பு கணைகள் மூலம் இடைமறித்து தாக்கிஅழித்துள்ளன. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள சுமார் 1,700 km தூரத்தை கணைகள் கடக்க எடுத்த நேரம் இடைமறித்து அழிக்க வழி செய்துள்ளது.
உள்வரும் எதிரியின் கணைகளை இஸ்ரேல் Iron Dome, David’s Sling, Arrow 2, Arrow 3 ஆகிய நான்கு தடுப்பு ஏவுகணை கட்டமைப்புகளை கொண்டுள்ளது.
ஆனாலும் வரலாற்றில் முதல் முறையாக ஈரான் இஸ்ரேலை நேரடியாக தாக்கியுள்ளது.
இஸ்ரேல் மீண்டும் ஈரானை தாக்க முனைந்தால் அந்த தாக்குதலில் அமெரிக்கா பங்கெடுக்காது என்று சனாதிபதி பைடென் கூறியுள்ளார்.