ஈரான் துறைமுகத்தில் இந்தியா முதலீடு

Chabahar

திங்கள் அன்று இந்தியாவும் ஈரானும் துறைமுக கட்டுமான ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டுள்ளன. அதன்படி இந்தியா ஈரானில் உள்ள Chabahar துறைமுகத்தை $500 மில்லியன் (0.5 பில்லின்) செலவில் அபிவிருத்தி செய்யும். இதன் நோக்கம் ஈரானையும் ஆப்கானிஸ்தானையும் இந்த துறைமுகத்துடன் இணைத்து மூன்று நாடுகளுக்கும் இடையே பொருளாதாரத்தை வளர்ப்பதாகும். குறிப்பாக இந்தியாவை பாகிஸ்தானுக்கு அப்பால் வர்த்தக போக்குவரத்தில் இணைப்பதாகும்.
.
இந்த துறைமுகத்தில் இருந்து ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நகர்களுக்கு நவீன வீதிகளும் அமைக்கடவுள்ளது.
.

ஈரானின் இந்த Chabahar துறைமுகம் பாகிஸ்தானின் Gwadar துறைமுகத்தில் இருந்து சுமார் 200 km தொலைவிலேயே உள்ளது. Gwadar துறைமுகத்தை சீனா சுமார் $46 பில்லியன் செலவில் அபிவிருத்தி செய்துள்ளது. Gawar துறைமுகத்தையும் சீனாவில் மேற்கு பகுதிகளையும் தரைவழியில் இணைக்கவுள்ளது சீன. அத்துடன் எரிபொருள் குழாய் இணைப்புக்களும் இந்த துறையில் இருந்து பாகிஸ்தான் மூலம் சீனாவை அடையும்.
.