ஒபாமா காலத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு இணங்கின. அந்த இணக்கப்படி ஈரான் அணு ஆயுதத்துக்கு பயன்படும் அணு வேலைகளை நிறுத்தியது. பதிலாக ஈரான் மீதான மேற்கு நாடுகளின் தடைகளும் நீக்கப்பட்டன. அப்போது ஈரான் நாள் ஒன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் பரல் எண்ணெய்யை ஒவ்வொரு நாளும் ஏற்றுமதி செய்தது.
.
ஆனால் பின் பதவிக்கு வந்த ரம்ப் தன்னிசையாக மேற்படி உடன்படிக்கையில் இருந்து வெளியேறி, ஈரானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அதில் ஒரு அங்கமாக ஈரானிடம் இருந்து எண்ணெய் பெறும் நாடுகளை தண்டிக்க உள்ளதாகவும் கூறினார்.
அதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் பல நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் பெறுவதை நிறுத்தின. நாள் ஒன்றுக்கான ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி 1.1 மில்லியன் பரல் ஆக குறைந்தது.
.
ஆனால் சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, துருக்கி ஆகிய நாடுகள் தொடர்ந்தும் ஈரானின் எண்ணெய்யை கொள்வனவு செய்தன. அமெரிக்காவோ மேற்படி நாடுகளுக்கு தாம் விலக்கு (waivers) அளிப்பதாக கூறியது.
.
இன்று திங்கள் அமெரிக்கா தான் இதுவரை வழங்கிய விலக்கையும் அடுத்த மாதம் முதல் நிறுத்தவுள்ளதாக கூறியுள்ளது. இந்த விவகாரமும் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நிலவிவரும் முரண்பாட்டை உக்கிரம் அடைய செய்யும்.
.
இந்தியாவுக்கும் ஈரானை பகைக்க விருப்பமில்லை. ஈரானில் தற்போது இந்தியா பெரிய துறைமுக கட்டுமானத்திலும் ஈடுபட்டுள்ளது.
.
வரும் நாட்களில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம்.
.