ஈரான் இணங்க மறுத்தால் குண்டு வீசுவாரம் ரம்ப் 

ஈரான் இணங்க மறுத்தால் குண்டு வீசுவாரம் ரம்ப் 

ஈரான் தான் விரும்பியபடி அணு சக்தி உடன்படிக்கைக்கு இணங்க மறுத்தால் ஈரான் மீது குண்டுகள் வீசப்படும் என்று அமெரிக்க சனாதிபதி ரம்ப் இன்று ஞாயிரு மிரட்டியுள்ளார்.

ஆனால் ஈரான் மீது குண்டு வீசுவேன் என்று கூறிய மறுகணம் தான் குண்டுக்கு பதிலாக மேலும் உக்கிரமான தடைகளை விதிப்பேன் என்றும் குழப்பமாக கூறினார் ரம்ப்.

2017 முதல் 2021ம் ஆண்டு வரையான தனது முதலாவது ஆட்சிக்காலத்தில் ரம்ப் அதற்கு முன் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல நாடுகள் செய்துகொண்ட அணு உடன்படிக்கையில் இருந்து வெளியேறி இருந்தார். அதன் பின் எந்தவொரு இணக்கமும் ஈரானுடன் ஏற்படவில்லை.

ஈரானை தன்னுடன் இணக்கத்துக்கு வருமாறு அழைக்கும் கடிதத்தை ரம்ப் ஓமான் மூலம் அனுப்பியுள்ளார்.

ஈரான் தனது அணு பயன்பாடு பொதுமக்கள் நலன்களுக்கு மட்டுமே என்றும் அணு ஆயுதங்களுக்கு அல்ல என்றும் கூறியுள்ளது.