பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் அமெரிக்கா சென்று, அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்பிடம் ஈரான் அணுவாயுத உண்டபடிக்கையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கேட்டிருந்தனர். ஆனாலும் ரம்ப் ஈரானுடனான ஆணுவாயுத உடன்படிக்கையில் இருந்து நேற்று வெறியேறி இருந்தார். இந்நிலையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாட்டு தலைவர்கள் தாம் தொடர்ந்தும் ஈரானுடன் இணைந்து செயல்படவுள்ளதாக இன்று கூறி உள்ளனர்.
.
.
ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் Heiko Maas “We remain committed to the nuclear deal” என்றுள்ளார். அத்துடன் அவர் ரம்பின் நடவடிக்கை புரிந்துகொள்ள முடியாத ஒன்று (incomprehensible) என்றும் கூறியுள்ளார்.
.
.
உண்டபடிக்கைக்கு அமைய ஜேர்மனியின் நிறுவனங்கள் ஈரானுடன் தெடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட உரிமை உண்டு. ஆனால் அந்த ஜேர்மனியின் நிறுவனங்கள் அமெரிக்காவிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அமெரிக்கா அந்த நிறுவனங்களை தண்டிக்க கூடும். அந்த விடயத்தை ஜேர்மனியின் தலைவர்கள் உணர்ந்திருந்தாலும், ஜேர்மனி பதிலுக்கு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று இதுவரை கூறவில்லை.
.
.
பிரான்சின் ஜனாதிபதி Macron தனது கூற்றில் ரம்பின் செயல்பாடு ஒரு தவறு என்றும் அதனாலேயே ஐரோப்பா தொடர்ந்து ஈரானுடனான உடன்படிக்கைக்கு உட்பட்டு செயல்படும் (I think it is a mistake and that is why we Europeans have decided to remain in the nuclear agreement of 2015) என்று கூறி உள்ளார்.
.
.
பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் தனது கூற்றில் “deeply regret US decision to withdraw from the Iran nuclear deal” என்றுள்ளார்.
.
.
இஸ்ரேல், சவுதி, UAE ஆகிய நாடுகள் மட்டுமே ரம்பின் நடவக்கையால் ஆனந்தம் கொண்டுள்ளன.
.
.
ஈரானின் எண்ணெய்யின் பெரும் பகுதியை சீனாவே கொள்வனவு செய்கிறது. அத்துடன் சீனாவும் இந்த அணு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது. ஆனால் சீனா இதுவரை அமெரிக்காவின் வெளியேற்றம் தொடர்பான தீர்மானங்களை இதுவரை வெளியிடவில்லை.
.
.