ஈரானுக்கு எதிராக இஸ்ரவேலும் சவுதியும் கூட்டு

MEK

கடந்த சனிக்கிழமை, 9ஆம் திகதி, பிரான்சின் பாரிஸ் நகரில் இடம்பெற்ற ஈரான் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று ஈரானின் தலைமைகளுக்கு வெறுப்பை ஊட்டியுள்ளது. ஈரானின் அரச எதிர்ப்பு குழுக்களுடன் சவுதியும், இஸ்ரவேலும் இணைந்து செயல்படுவதே இந்த வெறுப்புக்கு காரணம்.
.
MEK என்று அழைக்கப்படும் Mujahedeen-e-Khalq ஈரான்-ஈராக் யுத்த காலத்தில் சதாமின் ஆதரவுடன் ஈரானுக்கு எதிராக இயங்கிய ஆயுத குழு ஒன்று. இந்த குழுவை அமெரிக்கா உட்பட பல நாடுகள் பயங்கரவாத குழு என்று தடை செய்திருந்தன. ஆனால் தற்போது அந்த தடை அரசியல் இலாபங்கள் கருதி இரத்து செய்யப்பட்டது. அமெரிக்கா இந்த குழுவை 2012 ஆம் ஆண்டு முதல் பயங்கவாத பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியமும் 2009 ஆம் ஆண்டுவரை இந்த குழுவை ஒரு பயங்கரவாத இயக்கமாகவே கொண்டிருந்தது. MEK வருடாந்தம் பாரிஸில் ஈரான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு.
.
இம்முறை அந்த ஆர்ப்பாட்டத்தில் சவுதியின் முன்னாள் உளவு அதிகாரி Turki al-Faisal யும் கலந்துகொண்டிருந்தனர். அது மட்டுமல்லாது இஸ்ரவேல் ஆதரவு அமெரிக்க அரசியல் புள்ளிகளான Brad Sherman, Newt Gingrich, John Bolton, Rudy Giuliani ஆகியோரும் இந்த குழுவுக்கு ஆதரவு செய்கிறார்கள்.
.
அமெரிக்க யூதரும், சவுதியும் இணைந்து பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் செயல்பட்டதால் விசனம் கொண்ட ஈரான், பிரான்ஸின் ஈரானுக்கான தூதுவரை அழைத்து தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
.
சவுதிதான் அல்கைடாவையும், தலபானையும் வளர்த்ததாகவும் ஈரான் நினைவூட்டி உள்ளது.
.