ஈரானில் விமான விபத்து, 66 பேர் பலி

Aseman

ஈரானின் Aseman Airlines விமான சேவைக்கு சொந்தமான ATR-72 வகை விமானம் ஒன்று இன்று மலை பகுதி ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. அதில் பயணித்த 60 பயணிகளும், 2 விமானிகளும், 2 பணியாளரும், 2 பாதுகாப்பு அதிகாரிகளும் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
.
ஈரானின் தலைநகர் Tehranனுக்கு தெற்கே சுமார் 780 km தொலைவில் உள்ள Yasuj என்ற மலைப்பகுதி நகரிலேயே இந்த விபத்து இடம்பெறுள்ளது. விபத்தின் போது இப்பகுதி பனி நிறைந்து காணப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 14,500 அடி உயரத்தில் உள்ளது.
.
Aseman விமானசேவை ஈரானின் 3வது பெரிய விமான சேவையாகும். இன்று விபத்துக்கு உள்ளன விமானம் 1993 ஆம் ஆண்டில் சேவைக்கு வந்திருந்தது.
.

இந்த விமானத்தில் இருந்து இறுதியாக வெளிவந்த signal, விமானம் 16,975 அடி உயரத்தில் உள்ளபோது கிடைத்துள்ளது.
.