ஈரானில் இன்று புதன் காலை இடம்பெற்ற இரண்டு தாக்குதல்களுக்கு 12 பேர் பலியாகியும், மேலும் 42 பேர் காயமடைந்தும் உள்ளனர். மூன்றாவது தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ஈரான் புலனாய்வு அமைச்சு கூறியுள்ளது.
.
.
ஒரு தாக்குதல் Imam Khomeini’s நினைவாலயத்திலும் மற்றைய தாக்குதல் ஈரான் பாராளுமன்றத்திலும் இடம்பெற்று உள்ளன. தலைநகர் தெகிரானில் உள்ள இந்த இரண்டு இடங்களும் சுமார் 20 km இடைவெளியில் உள்ளன. குறைந்தது ஒரு தற்கொலை தாக்குதல்காரரும் பங்கு கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
.
.
ஈரானின் Islamic Revolutionary Guard இந்த தாக்குதல் சவுதியினதும், அமெரிக்காவினதும் வேலை என்று கூறியதாக செய்திகள் கூறுகின்றன.
.
அதேவேளை IS குழு இந்த தாக்குதலுக்கு உரிமை கொண்டுள்ளது. ஈராக்கில் இடம்பெறும் IS குழுவுக்கு எதிரான யுத்தத்தில் ஈரான் முன் உள்ளது. ஈரானும், ஈராக்கின் பெரும்பான்மையும் சியா இஸ்லாமியர் ஆவர். IS பெரும்பாலும் சுனி இஸ்லாமியர் ஆவர்.

ஈரானில் இன்று இடம்பெற்ற தாக்குதலுக்கு அமெரிக்காவின் வெளியுறவு திணைக்களம் அனுதாபம் தெரிவித்து உள்ளது.
.