ஈரானியரை கொல்லவும் சவுதி திட்டம்?

Saudi

துருக்கியில் உள்ள சவுதி தூதுவரகத்தின் உள்ளே வைத்து ஜமால் கசோகி (Jamal Khasoggi) என்பவரை படுகொலை செய்வதற்கு முன்னர், ஈரானிய உயர் அதிகாரிகளையும் படுகொலை செய்து, ஈரானின் பொருளாதாரத்தையும் அழிக்க சவுதி ஆலோசனை செய்திருந்ததாக அமெரிக்காவின் New York Times பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
.
ஈரானின் Quds Force என்ற படையணியின் தலைவரான மேஜர் ஜெனரல் Qassem Soleimani என்பவரும் இந்த தாக்குதல் திட்டத்தின் குறியாக இருந்துள்ளார். இவரின் கீழான படையணி சிரியாவின் அரசை பாதுகாக்க போராடியவர்கள்.
.
கசோகி கொலைக்கு காரணமானவர் என்று கூறப்படுபவரும், சவுதி இளவரசர் Mohammedக்கு நெருக்கமானவரும் ஆகிய சவுதி மேஜர் ஜெனரல் Ahmed al-Assiri என்பவரும், லெபனான் வழிவந்த அமெரிக்கரான George Nader (கிறீஸ்தவர்) என்பவரும், இஸ்ரேலியரான Joel Zamel என்பவரும் ஈரானுக்கு எதிரான இந்த திட்டத்துக்கு சுமார் $2 பில்லியன் நிதியை வேண்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
.
2016 ஆம் ஆண்டுகளில் பதவியில் இருந்த ஒபாமா அரசு இந்த திட்டத்துக்கு ஆதரவு வழங்காதபடியால், இந்த திட்டத்தை UAE அதிகாரிகளின் முன் வைக்கப்பட்டதாகவும் இந்த செய்தி கூறுகிறது.
.
ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர், ரம்பின் அரசின் முன்னும் இந்த திட்டம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
.
இந்த திட்டத்தை முன்னாள் பிரித்தானிய படை உறுப்பினர்களால் இயக்கப்படும், பிரித்தானிய நிறுவனம் ஒன்று நடைமுறை செய்யும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
.
கசோகி படுகொலையின் பின் சவுதி ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது.
.