ஈரானின் செய்மதியை ரஷ்யா ஏவியது, அமெரிக்கா விசனம்

ஈரானின் செய்மதியை ரஷ்யா ஏவியது, அமெரிக்கா விசனம்

ஈரானின் Khayyam என்ற செய்மதியை ரஷ்யா தனது Soyuz ஏவுகணை மூலம் இன்று ஆகஸ்ட் 9ம் திகதி ஏவி உள்ளது. High-resolution படங்களை எடுக்கக்கூடிய இந்த செய்மதியால் விசனம் கொண்டுள்ளது அமெரிக்கா.

சுமார் 600 kg எடை கொண்ட இந்த செய்மதியின் resolution 1 மீட்டர் ஆகும். இது 500 km உயரத்தில் உலகை வலம் வரும்.

ஈரானின் Iranian Space Agency தாம் இந்த செய்மதியை நீர்வளம், விவாசாயம் போன்ற நுகர்வோர் பயன்பாடுகளுக்கே பயன்படுத்த உள்ளதாக கூறினாலும் இந்த செய்மதி இராணுவ பயன்பாட்டுக்கே ஏவப்பட்டதாக அமெரிக்கா கருதுகிறது.

குறிப்பாக இந்த செய்மதி யூகிரைனில் தற்போது  நடைபெறும் யுத்தத்தில் படைகளின் நகர்வை அவதானிக்க பயன்பட உள்ளது என்று அமெரிக்கா கருதுகிறது. இந்த செய்மதி ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றாலும், முதல் பல மாதங்களுக்கு இது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிறது ரஷ்ய விண்வெளி நிலையம்.

மூன்று கிழமைகளுக்கு முன் ரஷ்ய சனாதிபதி பூட்டின் ஈரான் சென்று ஈரானின் தலைவர் ஆயாதொல்லா கொமேனியை சந்தித்து இருந்தார். அந்த சந்திப்பும் மேற்படி செய்மதி ஏவலுக்கு ஒரு உந்தம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவின் கடுமையான தடையில் உள்ள இரண்டு எதிரிகளான ரஷ்யாவும், ஈரானும் இணைவதை அமெரிக்கா விரும்பவில்லை.