ஒரு வல்லரசு என்று கூறப்பட்ட ரஷ்யா தற்போது பெருமளவு ஆயுதங்களை ஈரானிடம் இருந்து கொள்வனவு செய்கிறது. Shahed-136 போன்ற ஆளில்லா யுத்த விமானங்கள், Fateh, Zolfaghar போன்ற நிலத்தில் இருந்து நிலம் பாய்ந்து எதிரிகளை தாக்கும் ஏவுகணைகள் உட்பட பல ஆயுத தளபாடங்களை ரஷ்யா ஈரானிடம் இருந்து கொள்வனவு செய்கிறது.
அதேவேளை ரஷ்யா, ஈரான் ஆகிய இரண்டு எதிரி நாடுகளும் யுக்கிறேன் யுத்தத்தில் இணைந்ததால் அமெரிக்கா விசனம் கொண்டுள்ளது. தாம் ஈரான் மீது மேலும் தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அக்டோபர் 6ம் திகதி ஈரானின் சில உயர் அதிகாரிகள் ரஷ்யா சென்று ஆயுத விற்பனையை முற்று செய்துள்ளனர். அதன் பின் பெருமளவு ஆயுதங்கள் ரஷ்யா சென்றுள்ளன.
ஈரான் வழங்கிய Shahed-136 போன்ற ஆளில்லா ஏவுகணை விமானங்கள் யூக்கிறேனில் பாரிய அழிவுகளை செய்வதால் ஈரானை தண்டிக்கும்படி யுக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி மேற்கு நாடுகளை கேட்டுள்ளார். தற்கொலை தாக்குதல் செய்யும் இந்த ஆளில்லா விமானம் குறைந்த செலவில் பாரிய அழிவை ஏற்படுத்துகின்றன.
நேற்று திங்கள் Kyiv என்ற யுக்கிறேனின் தலைநகரில் இடம்பெற்ற தாக்குதல்கள் ஈரானின் Shahed-136 மூலம் செய்யப்பட்ட தாக்குதல்கள் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவின் பயன்பாட்டில் பிரபலமாகும் ஈரானின் ஆயுதங்களை கொள்வனவு செய்ய மேலும் பல நாடுகள் தற்போது முன்வந்துள்ளன