ஈராக்கில் கடந்த ஐந்து தினங்களாக இடம்பெறுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு சுமார் 100 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
.
ஈராக் ஒரு எண்ணெய்வளம் கொண்ட நாடு என்றாலும், அங்கு நிலவும் ஊழல் நிறைந்த அரசியலும், மக்கள் நலனில் அக்கறை இல்லாதா ஆட்சியும் மக்களை வீதிக்கு செல்ல வைத்துள்ளன.
.
அண்மையில் சுத்தமற்ற நீரை குடித்த பல்லாயிரம் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். தரமான மின் கட்டமைப்பு இன்மையால் அங்கு மின் தடை தினசரி நிகழ்வாக உள்ளது.
.
வேலைவாய்ப்பு இன்மையும் அங்கு மிக அதிகமாக உள்ளது. உலக வங்கியின் கணிப்பின்படி அங்கு 25% இளம் வயதினர் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர். அதனால் பஞ்சமும் அங்கு மிகையாக உள்ளது. அரசியல் செல்வாக்கு உள்ள ஒருசிலரே செல்வந்தர் ஆகின்றனர்.
.
Transparency International என்ற சர்வதேச அமைப்பின் 180 நாடுகளை உள்ளடக்கிய ஊழல் சுட்டி கணிப்பில் ஈராக் 168 ஆவது இடத்தில் உள்ளது.
.
அதேவேளை 54 பாராளுமன்ற உறுப்பினர்களை தன் கைவசம் கொண்ட Moqtada al-Sadr ஈராக்கின் பிரதமர் பதவி விலகவேண்டும் என்றுள்ளார்.
.