இஸ்லாமியரை வதைத்த அதிகாரிக்கு 10 வருடங்கள்

RaheelSiddiqui
புதிதாக அமெரிக்க இராணுவத்தில் இணைந்த இஸ்லாமிய இராணுவ உறுப்பினர்களை கடுமையாக துன்புறுத்திய Joseph Felix என்ற அமெரிக்க இராணுவத்தின் பயிற்சி அதிகாரிக்கு இராணுவ நீதிமன்றால் 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
.
ஈராக் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஜோசெப்[h Flex, தற்போது South Carolina என்ற மாநிலத்தில் உள்ள Parris Island என்ற பயிற்சி முகாமில் (Marine boot camp) அதிகாரியாகவுள்ளார். அங்கு பயிற்சிக்காக சென்ற இஸ்லாமிய உறுப்பினர்களையே இவர் கடுமையாக துன்புறுத்தி உள்ளார். இவர்களை “பயங்கரவாதிகள்”, “ISIS” என்றெல்லாம் அழைத்துள்ளார்.
.
இந்த அதிகாரி ஒரு இஸ்லாமிய உறுப்பினரான Ameer Bourmeche என்பவரை “அல்லாஹு அக்பர்” என்று கூறிக்கொண்டு இன்னோர் உறுப்பினரின் தலையை துண்டாடுவதுபோல் நடிக்கவும் கூறினாராம்.
.
இன்னோர் இஸ்லாமிய உறுப்பினரான Rekan Hawez என்பவரை பெரியதோர் உடுப்பு காயப்போடும் இயந்திரத்தில் (dryer) துன்புறுத்தினாராம். பின்னர் துன்புறுத்தப்பட்டவரை வெளியே எடுத்து “நீ இப்போதும் இஸ்லாமியரா?” என்று கேட்டுள்ளார். அப்போதும் அந்த உறுப்பினர் “நான் ஒரு இஸ்லாமியன்” என்றுள்ளார். பின்னர் வேறு ஒரு இயந்திரத்தில் போட்டு அந்த புதிய உறுப்பினரை வதைத்துள்ளார். பயத்தை காரணமாக இறுதியில் புதிய உறுப்பினர் “நான் ஒரு இஸ்லாமியன் அல்ல” என்றுள்ளார்.
.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் வம்ச அமெரிக்கரான 20 வயதுடைய Raheel Siddiqui என்ற புதிய உறுப்பினர் இவ்வகை பயிற்சிக்கால துன்புறுத்தல் காரணமாக 3ஆம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். அந்த நிகழ்வே இந்த விசாரணைகளின் ஆரம்பத்துக்கு காரணமாகியது.
.
மரணித்த Raheel Siddiqui என்பவரின் குடும்பம் $100 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
.
படம்: Raheel Siddiqui
.