இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு கைதுக்கு ICC கட்டளை 

இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு கைதுக்கு ICC கட்டளை 

இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு (Netanyahu), முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Gallant, ஹமாஸ் அதிகாரி Ibrahim Al-Masri ஆகிய மூவரையும் கைது செய்ய ICC என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) இன்று வியாழன் arrest warrants மூலம் கட்டளை இட்டுள்ளது. காசா யுத்தத்தில் இவர்கள் செய்த war crime களே கைது கட்டளைக்கான காரணம்.

இஸ்ரேல் பிரதமரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் காசா யுத்தத்தில் war crime, crimes against humanity, starvation as a weapon போன்ற குற்றங்களை செய்த ஆதாரங்கள் உள்ளதாக ICC கூறியுள்ளது.

காசாவுக்கு உணவு, நீர், மின்சாரம், எரிபொருள், மருந்து பொருட்கள் செல்வதை தடுப்பது போன்ற செயல்கள் காசா மக்களை கொடுமைப்படுத்தும் நோக்கிலேயே செய்யப்படுகின்றன என்றும் ICC கூறியுள்ளது.

ஹமாஸ் தரப்பில் கைதுக்கு கட்டளை இடப்பட்டுள்ள Mohammed Deif என்று அழைக்கப்படும் Ibrahim Al-Masri ஏற்கனவே யுத்தத்தில் மரணித்து உள்ளதாக கூறப்படுகிறது.

ICC அமைப்பில் அங்கம் கொண்டிராத அமெரிக்காவும் இஸ்ரேலும் ICC யின் கைது அழைப்பை கண்டித்துள்ளன. ஆனாலும் தனக்கு வேண்டாதவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் வேளைகளில் மட்டும் அமெரிக்கா ICC க்கு உதவி வந்துள்ளது.

இஸ்ரேல் ICC அங்கத்துவ நாடு இல்லை என்றாலும், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள காசா போன்ற பலஸ்தீனர் இடங்கள் ICC அங்கத்துவம் கொண்டன. அதனால் ICC க்கு இந்த யுத்தத்தில் தலையிட உரிமை உண்டு.

ICC அமைப்பிடம் எந்த நாட்டுக்கும் சென்று சந்தேக நபர்களை கைது செய்ய சொந்தமாக படைகள் இல்லை. ஆனால் சந்தேக நபர்கள் ICC அங்கத்துவ நாடுகளுக்கு செல்லும்போது அந்த நாடுகளின் பாதுகாப்பு படைகள் இவர்களை கைது செய்து ICC யிடம் கையளிக்க வேண்டும். பூட்டின் மீதான ICC யின் கைது கட்டளை காரணமாகவே பூட்டின் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்.