ஹெஸ்புல்லா குழுவை தாக்கும் நோக்கில் இஸ்ரேல் படைகள் லெபனானுள் இன்று செவ்வாய் நுழைந்துள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளடங்க மேற்கு நாடுகள் உடனடியாக 21-தின யுத்த நிறுத்தத்தை கேட்டு ஊளையிட்டு இருந்தாலும் இஸ்ரேல் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் தன் விருப்பப்படி லெபனானுள் நுழைகிறது.
இந்த ஆக்கிரமிப்பு ஒரு குறுங்கால நடவடிக்கை என்று இஸ்ரேல் கூறினாலும் அந்த கால அளவை கூற மறுத்துவிட்டது.
லெபனானுள் நுழைவதற்கு முன் இஸ்ரேல் தென் லெபனான் மீது பலத்த எறிகணை தாக்குதலை பல மணித்தியாலங்கள் செய்துள்ளது.
1982ம் ஆண்டு லெபனானில் இருந்த பலஸ்தீன குழுக்களை அழித்து அங்கு ஒரு கிறீஸ்தவ அரசு அமைக்க நுழைந்த இஸ்ரேலை விரட்ட ஆரம்பிக்கப்பட்டதே ஹெஸ்புல்லா. தனது விருப்பங்கள் நிறைவேறாத நிலையில் 1985ம் ஆண்டு இஸ்ரேல் லெபனானை விட்டு வெளியேறியது.