இதுவரை சுமார் 15,000 பலஸ்தீனர் பலியாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இத்தொகையில் இறந்த ஹமாஸ் குழுவினரும் அடங்குவாரா என்று பிரித்து கூறப்படவில்லை.
இஸ்ரேல் பலஸ்தீனர் பக்கத்தில் எத்தனைபேர் பலியாகினர் என்று இதுவரை கூறாவிட்டாலும் மேற்படி தொகையில் 5,000 பேர் ஹமாஸ் உறுப்பினராக இருக்கும் என்றும் மரணித்த பலஸ்தீனர் பொதுமக்கள் தொகை 10,000 ஆக இருக்கும் என்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ளார் Jonathan Conricus என்ற இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர்.
இவ்வாறு 1 ஹமாசுக்கு 2 பொதுமகன் என்ற விகிதத்தில் பலியாதல் “tremendously positive” என்றுள்ளார் Jonathan Conricus.
இந்த யுத்தத்துக்கு முன் சுமார் 30,000 ஹமாஸ் உறுப்பினர் இருந்ததாக இஸ்ரேல் கணிப்பிட்டு இருந்தது. அந்த கணிப்பின்படி மேலும் சுமார் 25,000 ஹமாஸ் உறுப்பினர் களத்தில் தற்போது இருக்கலாம்.
2014ம் ஆண்டு 50 தினங்கள் இடம்பெற்ற ஹமாஸ்-இஸ்ரேல் சண்டைக்கு மொத்தம் 2,251 பலஸ்தீனர் பலியாகி இருந்ததாகவும் அதில் 1,462 பேர் பொதுமக்கள் என்றும் ஐ.நா. கூறியிருந்தது. அதன்படி அப்போரில் பலியாகும் ஒவ்வொரு ஹமாஸுக்கும் சராசரியாக 1.8 பொதுமக்கள் பலியாகி இருந்தனர்.