இஸ்ரேல் ஒரு “யூதர் நாடு”, கூறுகிறது புதிய சட்டம்

Israel

இஸ்ரேல் பாராளுமன்றம் (Knesset) நேற்று வியாழன் ‘தனி சிங்கள சட்டம்’ போன்ற ஒரு யூதர் சார்பு சட்டத்தை உருவாக்கி உள்ளது. அந்த சட்டப்படி இஸ்ரேல் ஒரு “யூதர் நாடு” (nation of the Jewish people). இஸ்ரேலில் யூதர் பெரும்பான்மையாக இருப்பினும் அந்நாட்டின் 21% சனத்தொகை அரபு மக்களை கொண்டது. இந்த சட்டத்தை பலரும் ஒரு இனவாத சட்டம் என்று வர்ணித்துள்ளனர்.
.
மொத்தம் 120 உறுப்பினரை கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றின் 62 பேர் இந்த புதிய சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர், 55 பேர் எதிர்த்து வாக்களித்து உள்ளனர், 3 பேர் வாக்களிக்கவில்லை.
.
Joint List என்ற அரபு கட்சிகளின் கூட்டணியின் பாரளுமன்ற உறுப்பினரான Ayman Odeh இந்த சட்ட பிரதி ஒன்றை கிழித்து, இது ஒரு “Apartheid!” என்று கூறியுள்ளார். மொத்தம் 13 ஆசனங்களை கொண்ட இவரின் அரபு கூட்டணி இஸ்ரேலின் 3வது பெரிய கட்சியாகும்.
.
மேலும் இந்த சட்டம் Hebrew மொழியை மட்டும் அரச மொழியாகவும், அதேவேளை அரபு மொழியை ஒரு விசேட மொழியாகவும் நடைமுறை செய்துள்ளது.
.

அமெரிக்காவின் ரம்ப் ஆதரவு கையில் இருக்கையில், இஸ்ரேலிய பிரதமர் நெற்ரன்யாகு (Netanyahu) தான் விருப்பப்படி அரசியல் செயல்பாடுகளை செய்து வருகிறார்.
.