இஸ்ரேல் அரசில் பிளவு, ஹமாசை அழிப்பது கடினம்

இஸ்ரேல் அரசில் பிளவு, ஹமாசை அழிப்பது கடினம்

கடந்த 100 தினங்களுக்கு மேலாக அமெரிக்கா வழங்கும் அதிநவீன ஆயுதங்களை காசாவில் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்தினாலும் இஸ்ரேல் எதிர்பார்த்த அளவுக்கு ஹமாசை அழிக்க முடியவில்லை.

இதனால் இஸ்ரேல் அரசில் பிளவு ஏற்படுகிறது. காசா யுத்தத்துக்கு பொறுப்பான அமைச்சர்களில் ஒருவரான Gadi Eisenkot ஹமாசை முற்றாக அழிக்க முடியாது என்றுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு ஹமாசை முற்றாக அழிக்கும் வரை யுத்தம் தொடரும் என்று கூறியதன் பின்னரே Gadi Eisenkot தனது மறுப்பு கருத்தை தெரிவித்து பிளவை பகிரங்கம்  செய்துள்ளார்.

அத்துடன் இஸ்ரேலில் புதிய தலைமையை உருவாக்க உடனடியாக பொது தேர்தல் இடம்பெறவேண்டும் என்றும் Gadi Eisenkot கேட்டுள்ளார்.

இஸ்ரேலின் பிரதமருக்கு தற்போது சுமார் 15% ஆதரவு மட்டுமே உள்ளது என்று Israel Democracy Institute என்ற அமைப்பு கருத்தெடுப்பில்அறிந்துள்ளது.

இஸ்ரேலின் குண்டுகள் காசாவில் உள்ள கட்டிடங்களை தரை மட்டமாக்கி, சுமார் 25,000 உயிர்களை பலி கொண்டாலும் ஹமாசை பெருமளவில் அழிக்கவில்லை. இஸ்ரேலின் குண்டுகளுக்கு பலியானோரில் பெரும்பாலானோர் சிறுவர்களும், பெண்களுமே.