இஸ்ரேலை தாக்கிய ஹமாஸின் சூத்திரதாரி

இஸ்ரேலை தாக்கிய ஹமாஸின் சூத்திரதாரி

Mohammed Deif என்ற ஹமாஸ் உறுப்பினரே இஸ்ரேல் மீது வரலாறு காணாத திடீர் தாக்குதலை திட்டமிட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டு, பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

இவரே ஹமாஸின் ஆயுத பிரிவான அல் ஹஸாம் (Al Qassam Brigades) அணியின் தலைவர்.

2021ம் ஆண்டு மே மாதம் ஜெருசலேத்தில் உள்ள பலஸ்தீனரின் அல் அக்ஸா மசூதி (Al Aqsa mosque) உள்ளே இஸ்ரேல் நுழைந்து ரமலான் தொழுகையில் இருந்தோரை தாக்கியதே ஹமாஸின் பெரும் தாக்குதலுக்கு ஆரம்பமாகியது.

1965ம் ஆண்டு அகதிகள் முகாமில் பிறந்த இவரை படுகொலை செய்ய இஸ்ரேல் 7 தடவைகள் முனைத்திருந்தாலும் இவர் தப்பியுள்ளார். 2014ம் ஆண்டு இவரின் மனைவி, 7 மாத மகன், 3 வயது மகள் ஆகியோர் இஸ்ரேலின் விமான தாக்குதலுக்கு பலியாகி இருந்தனர்.

சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் இவரின் சகோதரனின் வீட்டை தாக்கியபோது இவரின் சகோதரனும், வேறு இருவரும் பலியாகி உள்ளனர்.

1987ம் ஆண்டேDeif ஹமாஸில் இணைத்திருந்தார். 1989ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்த இவர் 16 மாதங்கள் இஸ்ரேலின் சிறையில் வாழந்தவர்.

காசா பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பட்டம் பெற்ற இவர் பெளதீகம், இரசாயனம், உயிரியல் ஆகிய பாடங்களை கற்று இருந்தவர்.

பொது இடங்களுக்கு வராத இவரின் 3 படங்கள் மட்டுமே இஸ்ரேலிடம் உள்ளன. அதில் ஒன்று அவரின் 20ம் வயதுகளில் எடுத்து. இன்னொன்று முக கவசங்களுடனானது. மூன்றாவது அவரின் நிழல் மட்டுமே.

பாதுகாப்பு கருதி Cell phone போன்ற எந்த தொழில்நுட்பத்தையும் இவர் பயன்படுத்துவது இல்லை.

ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனர் நிலங்களில் யூதர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதை மேற்கு நாடுகள் கண்டுகொள்வதில்லை என்றும் Deif குற்றம் சாட்டியுள்ளார்.