இஸ்ரேலுக்கு பைடென் $8 பில்லியன் ஆயுத விற்பனை

இஸ்ரேலுக்கு பைடென் $8 பில்லியன் ஆயுத விற்பனை

ஒரு ஆண்டுக்கு மேலாக காசாவில் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா $8 பில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனையை செய்யவுள்ளதாக பைடென் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

தான் பதவி விலக சில தினங்களே இருக்கையில் பைடென் அவசர, அவசரமாக இந்த விற்பனையை செய்துள்ளார்.

இஸ்ரேலின் கையிருப்பில் உள்ள ஆயுதங்களின் தொகை குறைந்து உள்ளதால் அவற்றை நிரப்பும் நோக்கிலேயே இந்த ஆயுத விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மே மாதம் அமெரிக்காவின் State Department அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களை இஸ்ரேல் சர்வதேச சட்டங்களுக்கு முரணாக பயன்படுத்துகின்றது என்று கூறி இருந்தாலும் பைடென் அரசு இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை தொடர்கிறது. பைடென் அரச செயல் அமெரிக்க சட்டத்துக்கும் முரணானது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.