பலஸ்தீனர் ஆயுத குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது செய்த திடீர் தாக்குதலுக்கு பலியான இஸ்ரேலியர் தொகை தற்போது 700 ஆக அதிகரித்துள்ளது என்கிறது இஸ்ரேல் இராணுவம் (IDF). அத்துடன் சுமார் 2,000 இஸ்ரேலியர் காயமடைந்தும் உள்ளனர்.
காசா எல்லையோரம் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் மட்டும் 250 க்கும் அதிகமான இஸ்ரேலியர் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேல் மேற்கொள்ளும் பதில் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 413 பேர் காசாவில் பலியாகியும், 2,300 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
இரு தரப்பும் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
பல விமான சேவைகள் இஸ்ரேலுக்கான தமது சேவைகளை இடைநிறுத்தி உள்ளன.
இந்த விசயம் தொடர்பாக உரையாட அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய 5 நிரந்தர உறுப்பினர் உட்பட 15 நாடுகளை அங்கமாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபை கூடியிருந்தாலும், அது தீர்மானங்கள் எதுவும் இன்றி முடிந்துள்ளது.