இஸ்ரேலில் ஒரு வருடத்துள் நாலாம் தேர்தல்?

Israel

பன்முனை அரசியலால் சிதைந்து போயுள்ள இஸ்ரேலில் விரைவில் 4 ஆம் தேர்தல் இடம்பெறுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் அங்கு இடம்பெற்ற பொது தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை அடையாமையே இந்நிலைக்கு காரணம்.
.
கடந்த ஒரு வருடத்துள் அங்கு மூன்று தேர்தல்கள் இடம்பெற்றன. ஆனால் அனைத்து தேர்தல்களும் திடமான அரசை வழங்கவில்லை. திடமான ஆளும் கூட்டணியை உருவாக்க முடியாத நிலையில், பெரும் செலவில், மீண்டும் தேர்தல்கள் இடம்பெற்றன.
.
அண்மையில் இடம்பெற்ற 3 ஆம் தேர்தலில் ஆளும் வலதுசாரி கட்சி கூட்டணி 58 ஆசனங்களை மட்டுமே வென்றுள்ளது. மொத்தம் 120 ஆசனங்களை கொண்ட அவையில் பெரும்பாண்மை அரசை அமைக்க குறைந்தது 61 ஆசனங்கள் தேவை.
.
அத்துடன் 58 ஆசனங்களை வென்ற கூட்டணியை சார்ந்த தற்போதைய பிரதமர் மீதும் ஊழல் வழக்குகளும் மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளன.
.
இம்முறை இஸ்ரேலில் உள்ள Joint List என்ற அரபு கட்சிகளின் கூட்டணியும் 15 ஆசனங்களை வென்றுள்ளது. இஸ்ரேலில் சனத்தொகையில் சுமார் 21% மக்கள் அரபுகள்.
.