இஸ்ரேல் காசாவின் எகிப்து எல்லையோரம் உள்ள Rafah பகுதியில் செய்யும் யுத்தத்தை “உடனடியாக” நிறுத்த வேண்டும் என்று ICJ (International Court of Justice) இன்று வெள்ளி கட்டளை இட்டுள்ளது.
ஏற்கனவே காசாவின் ஏனைய இடங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அகதிகளாக இடம்பெயர்ந்து பெருமளவு மக்கள் தஞ்சம் அடைந்து வாழும் காசாவின் Rafah பகுதியில் இஸ்ரேல் யுத்தம் செய்வதை தடுக்கும்படி ICJ நீதிமன்றத்தை தென்னாபிரிக்கா மே 10ம் திகதி கேட்டிருந்தது.
நெதர்லாந்தின் The Hague நகரில் அமர்ந்த ICJ தனது தீர்ப்பில் “Israel must immediately halt its military offensive and any other action in Rafah…” என்று கூறியுள்ளது.
அத்துடன் யுத்தத்தை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு இடையூறு இன்றி இருக்குமாறும் இஸ்ரேலை ICJ கேட்டுள்ளது.
பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல் அமெரிக்காவின் முதுகில் பாதுகாப்பாக இருக்கும் இஸ்ரேல் ICJ கட்டளையை கணக்கெடுக்குமா என்பது அறிவிக்கப்படவில்லை.
ஆனாலும் இஸ்ரேலுடன் ஒட்டி உறவாடும் மேற்கு நாடுகளுக்கு இந்த தீர்ப்பு நெருக்கடியாக அமையும்.
ICJ தீர்ப்புகள் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளின் ஆதரவு இன்றி நடைமுறை செய்யப்பட முடியாது. இந்த நீதிமன்றம் யூக்கிறேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கேட்டிருந்தது. ஆனால் ரஷ்யா அதை கணக்கெடுக்கவில்லை.