இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்புகளுக்கு எதிராக ஐ.நா. வாக்கெடுப்பு

இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்புகளுக்கு எதிராக ஐ.நா. வாக்கெடுப்பு

அடுத்த கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபை (UN Security Council) இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள பலஸ்தீனர் நிலங்களில் புதிய யூத குடியிருப்புகளை அமைக்க முனைவதை தடுக்கும் நோக்கில் தீர்மானம் ஒன்றை வாக்கெடுப்புக்கு விட உள்ளது. இதை veto வாக்கு கொண்ட அமெரிக்கா தடுக்குமா என்பது இதுவரை அறியப்படவில்லை.

தற்போது இஸ்ரேலில் ஆட்சியில் உள்ள அரசு முன்னெப்போதும் இல்லாத அளவு பலஸ்தீன காழ்ப்பு கொண்ட இனவிரோத கூட்டணியாகும். இந்த அரசு மேலும் 10,000 சட்டவிரோத யூத குடியிருப்புகளை ஆக்கிரமித்துள்ள கிழக்கு ஜெருசலேத்தில் அமைக்க அறிவித்து இருந்தது.

மேற்படி அறிவிப்பை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக எதிர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தன. இந்த அறிக்கை உண்மையில் அடிமனதில் இருந்து வந்ததா அல்லது நாங்கள் சாட்டுக்கு எதிர்க்கிறோம், நீங்கள் சட்டவிரோத குடியிருப்புகளை தொடருங்கள் என்று கூறும் நடிப்பா என்பது அடுத்த கிழமை தெரியவரும்.

இந்த தீர்மானத்தை UAE என்ற மத்தியகிழக்கு நாடே வாக்கெடுப்புக்கு எடுத்து வருகிறது. ஆனால் UAE ஏற்கனவே இஸ்ரேலுடன் நெருங்கி உறவாடும் நாடு.