Netzah Yehuda என்ற இஸ்ரேலின் இராணுவ அணி (battalion) அமெரிக்க மற்றும் உலக சட்டங்களுக்கு முரணாக பலஸ்தீனரை படுகொலை செய்வதையும், கொடுமைப்படுத்துவதையும் அமெரிக்க பைடென் அரசு ஆதாரங்களுடன் அறிந்தும் அவற்றை மூடி மறைத்து ஆதரவு வழங்கி வருகிறது என்று அமெரிக்க CNN செய்தி சேவையின் விசாரணை அறிந்துள்ளது.
மேற்படி கொடூரங்கள் October மாதம் 7ம் திகதிக்கு முன் West Bank பலஸ்தீனர் மீது செய்யப்பட்டவை. அதாவது காசாவின் ஹமாஸ் செய்த தாக்குதலுக்கு முன்னானவை.
Netzah Yehuda அணி கடும்போக்கு, மதவாத (ultra-Orthodox) யூத ஆண்களை கொண்ட அணியாகும். இவர்கள் பலஸ்தீனர் மீது கடும் காழ்ப்பு கொண்டவர்கள்.
பைடென் அரசு இவ்வாறு கொடூர அணியை வளர்ப்பதை வெறுத்து Josh Paul (அமெரிக்க State Department அதிகாரி) போன்ற சில அதிகாரிகள் தம் பதவிகளை துறந்திருந்தனர்.
உதாரணமாக இந்த அணியே 78 வயதான பலஸ்தீன-அமெரிக்கரை 2022ம் ஆண்டு West Bank பகுதியில் படுகொலை செய்திருந்தது. இவ்வாறு குற்றம் செய்த லெப். கேர்ணல் Mati Shevach, லெப். கேர்ணல் Nitai, லெப். கேர்ணல் Uri Levy போன்ற இஸ்ரேலின் இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படுவதற்கு பதிலாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளனர்.