இஸ்ரவேலிடம் குடியிருப்பை நிறுத்து என்கிறது ஐ.நா.

UN_Israel_Palestinian

இன்று வெள்ளி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அங்கத்தின் (UN Security Council) அமர்வின்போது, இஸ்ரவேல் தெடர்ந்தும் பாலஸ்தீனியர் பகுதிகளில் புதிய யூத குடியிருப்புகள் அமைப்பதை நிறுத்தத்தவேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பின் 14 உறுப்பினர் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். ஒபாமா தலைமயிலான அமெரிக்கா வாக்களிப்பில் சமூகம் கொள்ளாது இருந்துள்ளது. அதாவது, மறைமுகமாக தீர்மானம் வெல்ல வழி செய்துள்ளது.
.
இஸ்ரவேல் இந்த ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்படாத சந்தர்ப்பத்தில் அந்நாட்டுக்கு எதிராக ஐ.நா. தடைகள் எதையும் நடைமுறைப்படுத்த இந்த தீர்மானத்தில் வழி இல்லை என்றாலும், இந்த தீர்மானம் இஸ்ரவேலுக்கு பலத்த பாதிப்பை கொடுத்துள்ளது.
.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகவுள்ள டிரம்ப், ஒபாமா அரசு இந்த தீர்வை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் ஒபாமா அரசே தற்போது பதிவில் உள்ளதால் டிரம்பால் தனது விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை.
.
முதலில் இந்த தீர்மானம் எகிப்தினால் முன்மொழியப்பட்டு இருந்திருந்தாலும், இஸ்ரவேலின் அழுத்தங்கள் காரணமாக, நேற்று சிசி அரசு விண்ணப்பத்தை பின்வாங்கியது. இன்று வெள்ளி அதே தீர்மானம் நியூசிலாந்து, மலேசியா, வெனிசுவேலா, செனேகல் ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டு வெற்றி பெற்றது.
.

2009 ஆண்டு முதல், நெற்றன்யாஹு தலைமையிலான அரசின் கீழ், அதிக அளவு புதிய யூத குடியிருப்புகள் பாலத்தீனர் நிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. 2016 ஆம் ஆண்டில் மட்டும் 15,000 யுத்தர்கள் புதிதாக இங்கு குடி அமர்த்தப்பட்டு உள்ளனர். இவற்றை நிறும்படியே ஐ. நா. தீர்மானம் கூறுகிறது.
.