கொரோனா காரணமாக இந்த ஆண்டு இடம்பெறவுள்ள பொருளாதார வீழ்ச்சி 1930 ஆம் ஆண்டில் உலக அளவில் இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சியிலும் அதிகமாக இருக்கும் என்று இன்று செவ்வாய் IMF (International Monitory Fund) கூறியுள்ளது.
.
உலக அளவில் இந்த ஆண்டு பொருளாதாரம் சுமார் 3% ஆல் வீழ்ச்சி அடையும் என்றும், அடுத்த வருடம் ஓரளவுக்கு மீண்டும் உலக பொருளாதாரம் வளரும் என்று IMF கூறி உள்ளது.
.
கடந்த ஜனவரி மாதம் 2020, கொரோனா பாதிப்புக்கு முன்னர், ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் 3.3% ஆல் வளரும் என்று IMF கூறி இருந்தது.
.
கடந்த 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சி உலக அளவில் 0.1% ஆல் மட்டுமே வீழ்ந்து இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் 3% வீழ்ச்சி மிகவும் உக்கிரமாக இருக்கும்.
.
ஜப்பானின் இந்தாண்டுக்கான பொருளாதார வீழ்ச்சி 5.2% ஆகவும், அமெரிக்காவின் வீழ்ச்சி 5.9% ஆகவும், கனடாவின் வீழ்ச்சி 6.2% ஆகவும், பிரித்தானியாவின் வீழ்ச்சி 6.5 ஆகவும், ஐரோப்பாவின் வீழ்ச்சி 7.5 ஆகவும் இருக்கும் என்றும் IMF கூறி உள்ளது.
.
2019 ஆம் ஆண்டு 6.1% பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்த சீன பொருளாதாரம் இந்த ஆண்டு 1.2% வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் என்றும் IMF கூறி உள்ளது. அதேவேளை 2019 ஆம் ஆண்டு 4.2% ஆகி இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.9% ஆக மட்டுமே இருக்கும்.
.