இந்தியாவின் இந்த வர்த்தக வருடத்துக்கான பொருளாதார வளர்ச்சியை உலக வங்கி (World Bank) 6% ஆக குறைத்து உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.
.
ஆனாலும் இந்தியாவின் பொருளாதாரம் நலமாக உள்ளதாக ஆளும் கட்சி கூறுகிறது. அமைச்சர் ரவி சங்கர் அங்கு அதிகமாக விற்பனையாகும் திரைப்பட அனுமதிகளை ஆதாரமாக கூறியுள்ளார்.
.
இந்தியாவின் பொருளாதாரம் சிலகாலத்துக்கு முன்னரே வீழ்ச்சி அடைய ஆரம்பித்து இருந்தாலும், அண்மையில் இடம்பெற்ற தேர்தல் காரணமாக ஆளும் பா.ஜ. கட்சி GDP கணிப்பில் குளறுபடி செய்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.
.
கடந்த தேர்தலின் போது அங்கு வேலைவாய்ப்பின்மை 45 வருட உயர்வில் இருந்தது.
.
இந்திய அமெரிக்கரான Abhijit Banerjee, அவரின் மனைவி Esther Dufl, Michael Kremer ஆகியோர் இந்த வருடத்துக்கான பொருளாதார நோபல் பரிசை வென்று இருந்தனர். ஆனால் Abhijit ஒரு காங்கிரஸ் சார்பானவர் என்பதால் மோதி அரசு அவரை ஒரு தேசிய விரோதி என்று வர்ணிக்கின்றது.
.
Abhijit மோதி அரசின் பல பொருளாதார கொள்கைகளை குறைகூறி இருந்தார்.
.