இலஞ்சம் வழங்குவதை தடுக்கும் சட்டத்தை நிறுத்தும் ரம்ப் 

இலஞ்சம் வழங்குவதை தடுக்கும் சட்டத்தை நிறுத்தும் ரம்ப் 

1970களில் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு பெருமளவு இலஞ்சம் வழங்கி தமக்கு தேவையான வர்த்தகதக நலன்களை பெற்று இருந்தனர். சுமார் 400 இவ்வகை இலஞ்ச வழங்கலை அறிந்த அமெரிக்கா 1977ம் ஆண்டு Foreign Corrupt Practices Act (FCPA) என்ற சட்டத்தை நடைமுறை செய்தது.

இந்த சட்டப்படி அமெரிக்கர் அல்லது அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி வர்த்தக நன்மை அடைவது குற்றமாகியது. பின்னர் இந்த சட்டத்தின் கீழ் பல பெரிய, சிறிய நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டும் இருந்தன.

இந்த சட்டத்தின் கீழ் குற்றாளியாக காணப்பட்ட Raytheon என்ற அமெரிக்காவின் பெரியதோர் நிறுவனம் கடந்த ஆண்டு $300 மில்லியன் தண்டம் செலுத்தி இருந்தது. 2019ம் ஆண்டு Walmart மெக்ஸிக்கோ, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் இலஞ்சம் வழங்கியதால் $282 மில்லியன் தண்டம் செலுத்தி இருந்தது.

இந்த சட்டத்தையே ரம்ப் திங்கள் executive order மூலம் இடைநிறுத்தி உள்ளார். இவரால் இந்த சட்டத்தை அழிக்க முடியாது, ஆனால் இந்த திணைக்களத்திற்கு பணம் வழங்காது இந்த சட்டம் நடைமுறை செய்யப்படுவதை தடுக்க முடியும். அதையே ரம்ப் தற்போது செய்கிறார்.

அமெரிக்காவின் FCPA சட்டத்தின் நன்மைகளை அறிந்த சுமார் 40 நாடுகள் தாமும் இவ்வகை சட்டத்தை தமது நாடுகளில் நடைமுறை செய்தன.

ரம்பின் ஆட்சியில் அமெரிக்க நிறுவனங்கள் மீண்டும் பயம் இன்றி வெளிநாடுகளின் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி தமது காரியங்களை நிறைவேற்ற முடியும்.