இலஞ்சம் வழங்கி மாலைதீவை கவர இந்தியா முயற்சி?

இலஞ்சம் வழங்கி மாலைதீவை கவர இந்தியா முயற்சி?

மாலைதீவு அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்கி அவர்களை இந்திய ஆதரவாளர் ஆக்கும் நோக்கில் இந்தியா மாலைதீவு அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்குவதாக அமெரிக்காவின் The Washington Post செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவின் இந்த முயற்சி “Democratic Renewal Initiative” என்ற இரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், அந்த ஆவணத்தை தாம் பார்த்ததாகவும் The Washington Post செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மாலைதீவின் எதிர் கட்சியினர் மட்டுமன்றி ஆளும் கட்சி உறுப்பினர் உட்பட 40 பேருக்கு இந்தியா இலஞ்சம் வழங்க முனைந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் 10 இராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகள், 2 வன்முறை குழு ஆகியவருக்கும் இலஞ்சம் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று மேற்படி செய்தி கூறுகிறது.

இந்தியாவின் RAW அமைப்பின் இந்த திட்டத்துக்கு $6 மில்லியன் (87 மில்லியன் மாலைதீவு ரூபாய்கள்) செலவிட கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரக RAW அதிகாரி ஒருவர் Shirish Thorat (வாஷிங்டன் நகரில் வாழும் ஒரு முன்னாள் இந்திய போலீஸ் அதிகாரி), Savio Rodrigues (வெளியீட்டாளர்) ஆகிய இருவரை பயன்படுத்தி மாலைதீவு அரசை கவிழ்க்க முனைந்ததாகவும் மேற்படி செய்தி கூறியுள்ளது.

ஆனாலும் பல மாதங்கள் இடம்பெற்ற இலஞ்சம் வழங்கி சீன ஆதரவு Muizzu ஆட்சியை கலைக்க செய்த முயற்சி பயன் எதையும் வழங்கவில்லை என்று இந்தியா அறிந்துள்ளது.

மாலைதீவில் இடம்பெறும் பல அரசியல் குழப்பங்களுக்கு பின்னணியில் இந்தியாவே உள்ளது என்கிறது மேற்படி செய்தி. 

https://www.washingtonpost.com/world/2024/12/30/maldives-president-muizzu-india-china-influence