இலங்கை அக்டோபர் 1ம் திகதி முதல் 35 நாட்டவர்க்கு இலவச 30-தின உல்லாச பயணிகள் விசா வழங்கவுள்ளது. இந்த சலுகை 6 மாத காலத்துக்கு நீடிக்கும்.
இலங்கைக்கு வரும் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த இலவச விசா திட்டத்தின் நோக்கம் என்று கூறுகிறார் போக்குவரத்துக்கு அமைச்சர் பந்துல குணவர்தன.
இலவச உல்லாச பயண விசா பெறும் 35 நாடுகள் வருமாறு:
Australia, Austria, Bahrain, Belarus, Belgium, Canada, China, Czech Republic, Denmark, France, Germany, India, Indonesia, Iran, Israel, Italy, Japan, Kazakhstan, Malaysia, Nepal, Netherlands, New Zealand, Oman, Poland, Qatar, Russia, Saudi Arabia, South Korea, Spain, Sweden, Switzerland, Thailand, United Arab Emirates, United Kingdom and United States.
VFS Global இழுபறியால் தற்போது இணையம் மூலம் உல்லாசப்பயணிகள் விசா பெற முடியாது உள்ளது. இந்த புதிய இலவச விசா திட்டம் VFS Global இழுபறியால் ஏற்படும் பாதிப்பை சிறிது குறைக்கும்.
இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் இலங்கை $1.5 பில்லியன் வருமானத்தை உல்லாச பயணிகளால் பெற்றுள்ளது.