இலங்கைக்கான விசா வழங்கல் மீண்டும் பழைய Mobitel இணையம் மூலம் செய்யப்படுகிறது.
இந்த இணையமே நீண்ட காலமாக இலங்கைக்கான விசா வழங்கும் பணிகளை செய்து வந்தது. ஆனால் அமைச்சர் Tiran Alles காலத்தில் இந்த பணி இலங்கையின் Mobitel நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டு இந்தியாவின் VFS Global நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது.
VFS Global கடணங்களை மிகையாக அதிகரித்தது. VFS Global கையளிப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட, நீதிமன்றம் பழைய முறைமைக்கு மாற்றி அமைக்க பணித்தது. ஆனால் அதற்கு அரசின் புதியதோர் பணிப்பு அவசியமானது.
AKD ஆட்சியின் அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புக்கு ஏற்ப பழைய Mobitel இணையம் மீண்டும் சேவைக்கு வந்துள்ளது. விசா கட்டணமும் குறைக்கப்படுள்ளது.